277
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இசைக்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை வருகிற ஜனவரி மாதம் 15ம் திகதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #இசையமைப்பாளர் #இளையராஜா #ஹரிவராசனம் #விருது
Spread the love