Home இலங்கையாழ் – மன்னார் மாவட்டங்களின் புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜைகளும், திருக்கேதீச்சர வழிபாடுகளும்…

யாழ் – மன்னார் மாவட்டங்களின் புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜைகளும், திருக்கேதீச்சர வழிபாடுகளும்…

by admin

யாழ்ப்பாணம் – பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் புத்தாண்டு தினமான இன்று 01.01.2020 புதன் கிழமை நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

2019 ஆம் ஆண்டு நிறைவடைந்து புதிதாக மலர்ந்துள்ள புது வருடத்தை வரவேற்கும் முகாமக மன்னார் மாவட்டம் முழுவதும் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் ஆராதனை நிகழ்வுகள் இடம் பெற்றன.

குறிப்பாக மன்னார் புனித செபஸ்ரியார் தேவாலயதின் புதுவருட திருப்பலியானது மேதகு மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பம் ஆகி இடம் பெற்றதுடன் கிராம ரீதியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களிலும் வருட பிறப்பை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றன.

அதே நேரம் மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் மறைமாவட்டத்தின் மூத்த பங்குமாகிய பேசாலை புனித.வெற்றி அன்னை ஆலயத்திலும் வருடப் பிறப்பு திருப்பலியை கத்தோலிக்க சட்ட வல்லுனரும் பேசாலை பங்கு தந்தையுமான அருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜா அடிகளார் தலைமையில் உதவி பங்கு தந்தை அருட்பணி றஞ்சன் சேவியர் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

அத்தோடு புகழ் பெற்ற திருகேதீஸ்வர ஆலயத்திலும் புதுவருடத்தை முன்னிட்டு திருகேதீஸ்வர பிரதம குரு கண்ணன் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

தொடர்சியாக ஏப்ரல் 21 திகதி குண்டு வெடிப்பு துயரத்தில் இருந்து மீண்டு மக்கள் புத்தாடைகளை அணிதும் இனிப்புக்களை பகிர்ந்து கொண்டும் உறுவினர்கள் இல்லங்களை தரிசித்தும் புது வருடத்தை கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி.
புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். இதன் போது பேசாலை மற்றும் அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கத்தோழிக்க மக்கள் திருநாள் திருப்பலியில் கலந்து கொண்டனர். புத்தாண்டு திருப்பலியை தொடர்ந்து வீடுகளுக்கு சென்று பெறியோரிடம் ஆசி பெறும் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More