வவுனியா பிரதேச செயலாளராக ந. கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் காணி மோசடிகளுடன்்ஈடுபட்டுள்ளதாக ஊழலற்ற மக்கள் அமைப்பு மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாற்றப்படுள்ளார். இந் நிலையில் வெற்றிடமாக காணப்பட்ட வவுனியா பிரதேச செயலகத்திற்கு வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ந. கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் புதிய பிரதேச செயலாளர் நாளை 16 ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். புதிய பிரதேச செயலாளராக கடமைகளை பொறுபலபேற்கவுள்ள ந. கமலதாசன் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக முன்பு சிறப்பாக கடமையாற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக கமலதாசன்
183
Spread the love