178
இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை மஸ்கட்டிலிருந்து இலங்கை சென்ற யு.எல் – 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #உதயங்கவீரதுங்க #கைது #தூதுவர்
Spread the love