இந்த ஆண்டிறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது சாத்தியமற்றதென பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தைகள் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் எனவும் மீன்பிடி உரிமைகள் தொடர்பில் கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கைக்கான ஆணைகளை இவ்வார இறுதிப் பகுதியில் வௌியிடுவதற்கான சமிக்ஞைகளை பிரித்தானியா வௌிப்படுத்தியுள்ள நிலையிலேயே பிரெஞ்ச் ஜனாதிபதியின் இந்தக் கருத்து வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.