ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை ஆற்றில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் இருந்து சவாய்மதோபூருக்கு 40 பேர் அடங்கிய திருமண குழுவுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தினையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் மீட்புபணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 24 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ராஜஸ்தானில் #பேருந்து , #விபத்து