Home உலகம்‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ – செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ – செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

by admin

ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள்; சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சீனாவில் {ஹபேய் மாகாணம் வுகான் நகரிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அவுஸ்திரேலியா, தென்னாபிரிகாக , ஈரான், இத்தாலி, மலேசியா, இந்தியா என உலகின் 25க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளதுடன் 77 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு சீனாவில் செயல்பட்டுவரும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரி;கை தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கடந்த 3ம் திகதி அமெரிக்காவை சேர்ந்த ஆசிரியர் வால்டர் ருசல் மேட் என்ற ஆசிரியர் எழுதி வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கட்டுரையில் ‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பிட்டிருந்தார்.
அந்த சிறப்பு செய்தியில் கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்தில் சீனா சரிவர செயல்படவில்லை என விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.

இதனால், சீனா குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் அந்தக் கட்டுரையை வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிட்ட அதன் துணை தலைமை செய்தி ஆசிரியரான அமெரிக்காவை சேர்ந்த ஜோஷ் சின், செய்தி சேகரிப்பாளர் சோ டேங்க் மற்றும் அதே பத்திரிக்கையில் பணிபுரியும் ஆஸ்திரிலியாவை சேர்ந்த மற்றொரு செய்தி சேகரிப்பாளர் பிலிப் வெங் ஆகியோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சீன அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து துணை தலைமை செய்தி ஆசிரியர் செய்தி சேகரிப்பாளர் ஆகியோhர் கடந்த திங்கள்கிழமை சீனாவில் இருந்து விமானம் மூலம் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா தங்கள் நாட்டில் செயல்பட்டுவரும் சீன பத்திரிக்கைகள், செய்திநிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #ஆசியா #நோயாளி  #சீனா  #பத்திரிக்கையாளர்கள்  #வெளியேற்றம் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More