164
இன்று நள்ளிரவு முதல் நாளைய தினம் (06) புகையிரத எஞ்சின் சாரதிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளனர். போதைப்பொருள் போக்குவரத்துடனும், கடத்தலுடனும் புகையிரத சாரதிகள் நேரடியாகத் தொடர்புபடுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து இன்று (05) ஊடகங்களில் வெளியானதன் பின்பு அந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புகையிரத எஞ்சின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்திருந்தனர்.
சற்று நேரத்திற்கு முன்னர் விஜேராமை உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட விசேட கலந்துரையாடலின் பின்பு அத்தீர்மானத்தை இடைநிறுத்தி வழமை போன்று புகையிரதங்களைச் செலுத்துவதற்கு எஞ்சின் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்தினை திருத்துவதற்கும் புகையிரத சேவையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் வாரத்தில் சந்தர்ப்பம் வழங்கவும் பிரதம அமைச்சர் தீர்மானித்தார். #பிரதமர் #புகையிரத #பணிப்பகிஷ்கரிப்பு #இடைநிறுத்தம் போதைப்பொருள்
Spread the love