பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜ் சுரேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியது.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடந்த 03 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.