இலங்கை பிரதான செய்திகள்

அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களின்போது கோரப்படும் தகுதி நிலைகளில் சற்று தளர்வினை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வகையிலேனும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை காணவேண்டும் என்ற நோக்கிலேயே தன்னுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், வளம் நிறைந்த வன்னி மண்ணை வளம் கொழிக்கும் பிரதேசமாக மாற்றும் முயற்சியின் ஒரு கட்டமாக அங்கு காணப்படுகின்ற நன்னீர் மற்றம் உவர்நீர் நீர் நிலைகளை அபிவிருத்தி செய்து நீர் வேளாண்மையை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேராவில், வள்ளுவர்புரம், குறவயல், மூங்கிலாறு, கைவேலி, மருதமடு, வேணாவில் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அந்தவகையில் கைவேலி பகுதியில் நேற்று(09.03.2020) நடைபெற்ற மக்கள்  சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மக்களது பிரச்சினைகளை மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்த  அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வளம் நிறைந்த முல்லை மண் கடந்தகால திறனற்ற தலைமைத்துவங்களின் வழிநடத்தல்களாலும் சுயநலன்களாலும் பாழாக்கப்பட்டுக் கிடக்கிறது என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர்  , இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுத்து மக்களுக்கு சிறந்த வாழ்வியல் நிலையை உருவாக்கிக்கொள்ள தம்;மிடம் சிறந்த பொறிமுறை இருப்பதாகவும் தனது இந்த தூர நோக்குள்ள சிந்தனைக்கும் உழைப்பிற்கும் மக்கள் பூரண அதரவை வழங்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு சிலரின் பதவி ஆசைக்கான உசுப்பேற்றல்களுக்கும் யதார்த்தமற்ற சிந்தனைகளுக்கும் எடுபடாமல் எதிர்காலத்திலேனும் மக்கள் சிந்தித்து செயற்பாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.  #யுத்தம்  #தொழில்வாய்ப்பு  #டக்ளஸ்தேவானந்தா  #வன்னி

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap