கண்காணிப்பு நடவடிக்கைகளை தவிர்த்தவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் முதலாம் திகதியிலிருந்து 9ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கை சென்றடைந்த அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் வசிப்பிடங்களை கண்டறிய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேவேளை சுமார் 2000 பேர் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெவ்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 16 கண்காணிப்பு மத்திய நிலையங்களில் சுமார் 2,200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். #கண்காணிப்பு #சொத்துக்கள் #அரசுடைமை #அஜித்ரோஹண #சவேந்திரசில்வா