Home இலங்கை11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றம்

11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றம்

by admin


அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியினை அடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழலின் போது இருவர் உயிரிழந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் விடுக்கப்படடடிருந்தன.
இதற்கேற்ப இன்றிரவு முதற்கட்டமாக அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 11 அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  #தமிழ்  #அரசியல்கைதிகள்  #யாழ்சிறைச்சாலை  #அநுராதபுரம்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More