கொரோனா பரவலை தடுக்கும் முகமாக தமிழகத்தில் இன்று மாலை 6மணி முதல் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது. இத்தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அரசு தரப்பு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் இவ்வாறு 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
*தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
*அனைத்து மதுபான விற்பனை கடைகளும் மூடப்படும்.
*அரசு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மார்ச் 31ம் திகதிவரை பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
*அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் இயங்கும். மளிகை கடைகள், உணவகங்கள் செயல்படலாம்.
*உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை.
*பால், கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லலாம்
*அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையை தவிர்த்த பிற வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. #தமிழகத்தில் #144 தடை #உத்தரவு #கொரோனா