ஊடக வெளியீடுகள் – 28.03.2020
அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள் (2020.03.28)
அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும்.
தொலைபேசி இலக்கங்கள்
0114354854 / 0114733600
நேரடி தொலைபேசி இலக்கங்கள்
0113456200 / 0113456201 / 0113456202 /0113456203 / 0113456204
பெக்ஸ் இலக்கங்கள்
0112333066 / 0114354882
மின்னஞ்சல் முகவரி – [email protected]
‘‘உணவுப்பொருட்களின் போக்குவரத்துக்குச் சிரமங்களையோ இடையூறுகளையோ தடுக்குக” : பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை
நாட்டில் ஊரடங்கு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் அது முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற அதேவேளையில், மனிங் சந்தை உள்ளிட்ட அனைத்துப் பொருளாதார நிலையங்களுக்கும் மரக்கறிகள், பழங்கள், தேங்காய்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்குத் தேவையான அனுமதி வழங்கப்பட வேண்டுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இன்று (28.03.2020) பணிப்புரை விடுத்தார்.
விவசாயிகளிடமிருந்து இந்த உணவுப் பொருட்கள் சிரமங்களின்றிச் சந்தையைச் சென்றடைவதன் மூலமாக, பாவனையாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஒழுங்காகவும் தடைகளின்றியும் அடைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்காகவே, பொலிஸ்மா அதிபருக்கு இப்பணிப்புரைகளைப் பிரதமர் வழங்கியுள்ளார்.
இப்பணிப்புரையைப் பிரதமர் வழங்கும் போது, தற்போது உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் பொறிமுறையில் உள்ள சிரமங்கள், இடையூறுகள் தொடர்பாக கிடைக்கப்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்டிருந்தார்.
அதேபோல், கொரோனாவைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவலை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த பிரதமர், இத்தொற்றானது உலகம் முழுவதும் பேரழிவுமிகுந்த தொற்றாக வேகமாகப் பரவிவரும் நிலையில், மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு உதவி வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரினார்.