கொள்ளை கூட்டங்கள்
றோட்டுக்கு போக ஏலா
சொந்தங்களோட பேசிட ஏலா
சுகதுக்கங்களில் கலந்திட ஏலா
கைகளைகொடுத்திட ஏலா
ஆடம்பரமாக வாழ்ந்திட ஏலா
வீட்டிலையும் தள்ளித்தான்
வீதியிலையும் தள்ளித்தான்
மைதானத்திலும் தள்ளித்தான்
மயானத்திலும் தள்ளித்தான்
மதத்தலங்களிலும் தள்ளித்தான்
சோற்றுக்கும் வழியில்லை
சொந்த உழைப்பும் இல்லை
மந்திரமும் கேட்பதில்லை
மனதுக்கு நிம்மதியுமில்லை
இருப்பதை கொடுத்திடுவோம்
இரந்தாவது கொடுத்திடுவோம்
இல்லாதவர்களுக்கும் கொடுத்திடுவோம்
இரக்கத்தையும் கொடுத்திடுவோம்
நினைக்குதுகள் நல்மனங்கள்!
சாவதெல்லாம் சாகட்டும்
வாடுவதெல்லாம் வாடட்டும்
வாய்த்ததை வாய்ப்பாக்கி
விலை ஏற்றியே விற்று
செல்வந்தன ;ஆகிட துடிக்கும்
மாபாவிகளை என்னவென்று அழைப்பது?
வ.துசாந்தன்
கறுப்பாய்தெரிந்தவன்
காலனோ?
வண்ணத்து பூச்சிமொச்சி
தேன் உறிஞ்ச
பூங்குழல் மங்கையவள்
மனமகிழ்ந்து நிற்க
தூரத்தில் நின்ற தும்பிகளும்
சுழன்றடித்து
மின்னியவளையல்களில்
மொய்த்து இருக்க
காலைபொழுது மாலையானதே!
சனநெரிசல்
இடையிடையே இரும்பு கோபுரம்
கீழ்இருந்து மேல்நோக்கி
கறுப்பாய் என்னமோ ஒன்று
வட்டமாயும்,
நீட்டாகவும் பூட்டியிருக்கு
காட்சி, பேச்சு
அலையாய் வீச்சு
காற்றிலே!
வட்டமிட்ட வண்ணத்து
சுழன்ற தும்பி
பறந்த, மொய்த்த இடங்களில்
ஈக்கள் மொய்த்திருக்கு
கறுப்பாய் தெரிந்தவன்
காலனோ?
வ.துசாந்தன்