132
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 881 இறப்புகள் பதிவாகி உள்ளது. இதனையடுத்து பிரித்தானியாவின் மொத்த இறப்புக்கள் 7978 ஆக அதிகரிதுள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 4,344 புதியவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து இதுவரை பிரித்தானியாவில் மொத்தமாக 65,077 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக இனம்காணப்பட்டு உள்ளனர். எனினும் வெகுஜன பரிசோதனை பரவலாக்கப்படாத நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love