
கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர் மறுநாள் கைதாகி இருந்தார்.
குறித்த கைதான சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மேலதிக தகவலை பெற்ற பின்னர் வியாழக்கிழமை(23) இன்று சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 ஐ சேர்ந்த 38 வயதினையுடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு இரண்டாவதாக கைதான சந்தேக நபர் ஏலவே கைதான சந்தேக நபருக்கு துப்பாக்கி சுடுவது குறித்து பயிற்சி அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று கைதான இரண்டாவது சந்தேக நபரது இடது கையில் 4 விரல் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏலவே மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை அதனை பயன்படுத்த உதவி செய்தமை துப்பாக்கி சூட்டு பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய இச்சந்தேக நபர் கைதாகியுள்ளார். இது தவிர பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை வெள்ளிக்கிழமை(24) இரண்டவது சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் #சம்மாந்துறை #துப்பாக்கி #மீட்பு #கைது #பாகிஸ்தான்