கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தீபிகா உடுகம இவ்வாறான சம்பவங்களின் போது, கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு எனவும் கைதுசெய்யப்படும் நபர்கள் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #கைது #கொரோனா #மனிதஉரிமைகள்ஆணைக்குழு