அமெரிக்காவின் நியூயோர்க் நகரின், கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய முதன்மையான மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 49 வயதான மருத்துவர் லார்னா ப்ரீனா என்பவர் மன்ஹாட்டனில் உள்ள நியூயோர்க்-ப்ரெஸ்பிடேரியன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுத் துறையின் மருத்துவ இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஞாயிறன்று தன்னைத்தானே காயப்படுத்தி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவரின் தந்தையான மருத்துவர் ஃபிலீப் ப்ரீன் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் ‘லார்னா தன் வேலையை செய்ய முயற்சித்தார் ஆனால் அதுவே அவரைக் கொன்றுவிட்டது’ என்று கூறியுள்ளார். இதுவரை தன்னுடைய மகளுக்கு எந்த விதமான மன நோயும் இல்லை என அவரது தந்தையான மருத்துவர் ஃபிலிப். தேரிவித்துள்ளார்.
லார்னா தனது குடும்பத்துடன் விர்ஜீனியாவில் வசித்து வந்துள்ளார். எனவும் அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பின் ஒருவாரம் கழித்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார் எனஅவரின் தந்தை. தேரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 56,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் 17, 500 உயிரிழப்புகள் நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #மருத்துவர் #தற்கொலை