“தாயின் பாதத்தடியில் தான் சேயின் சொர்க்கமிருக்கிறது.” அதே போலத்தான் மனிதனை வழி நடத்திச் கண்கள். நாட்டை ஒளி பெறச் செய்வது பெண்கள். இதனை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ இயலாது. பாரதி வகுத்த புதுமைப் பெண்ணின் தாற்பரியத்தினால் பெண்கள் தங்கள் தடைகளைக் கடந்து முன்னேறி வந்துள்ளனர்.
சமூகத்தின் நிலையில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், வீட்டினில் வழங்கப்பட்ட சிறை வாசம், வரதட்சனை கொடுமை என்பன தகர்த்தப்பட்டதோடு பெண்களின் உயர்விற்கு காந்தியடிகள் , பாரதிதாசன், மோகன்ராய் போன்றோர் பாரிய குரல் கொடுத்துள்ளனர். சீர்த்திருத்தங்களே பெண்மைக்கு ஏற்படும் மாற்றங்கள் எனும் உண்மையை எடுத்துக்காட்டினர். அவ்வழியே தான் பெண்கள் தங்கள் கால் தடங்களைப் பதித்து வருகின்றனர். பெண்கள் தங்கள் முன்னேற்றத்தால் உயர்வு பெற்றாலும் இன்னும் அவர்கள் சமூகத்தின் பார்வையில் முற்றிலுமாக முன்னேற்றமடையவில்லை எனலாம். காரணம் பெண்கள் சமூகத்தின் பிரதான கண்ணாக இருப்பதே ஆகும்.
சமூகத்தின் நிலையில் ஒரு பெண்பிள்ளை சிறுவயது முதல் வளர்க்கப்படும் சூழலைப் பொறுத்தே அவளுடைய ஆழுமை அமைகின்றது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் அடக்கப்பட்டு வளர்க்கப்டும் ஒரு குழந்தையினால் பிற்காலத்தில் தனது உரிமைகளுக்காகப் போராடி வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆததால் ஆளுமை குறைந்தவர்களே நாளடைவில் மன அழுத்தத்தினால் பாதிக்ப்படுவதாக அறியப்படுகிறது.
“நவீன நாகரிக மோகத்தில் நசுங்கிப்
போய், ஆபாசத்தைக் கூட ஒருவகை
ஆசாபாசம் என்று கூறும் சமூகமே…
இன்னும் எத்தனையோ முல்லை மொட்டுகள்
மலர துடிக்கின்றன. மலர்ந்தாலும் படர கொடி
இல்லாமல் மடிந்து மண்ணாகின்றன….
பெண்களே இத்திரு நாட்டின் கண்களே..
இமைக்குள் இருக்கும் போதே கண்களின்
சக்தி வெளிப்படும்…
இமை விட்டுப் போன கண்கள் பார்வை
இழந்துவிடும்…!!!
எனவே தான் பால்நிலை வேறுபாடு காரணமாக பெண்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகின்றன. பெண்களைத் தாயாக, துணைவியாக , தர்மபத்தினியாக ,செவிலித்தாயாக பல்வேறு அம்சங்களில் வீட்டிற்குரிவர்களாக ஆக்கிக் கொண்ட சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகளும் குறைந்தபாடில்லை. அவ்வாறிருக்க…..”’சமூகத்தின் மட்டத்தில் பொதுவான சூழல் நிறைந்த இடங்களில் பெண்களையே முன்னிடம் கொடுக்கின்றனர். உதாரணமாக மருத்துவ நிலையங்களில் தாதிமார் மற்றும் ஆசிரியர் ஆயா தொழிலில் குழந்தை வளர்ப்பு மையங்களில் பெண்களுக்கு முதலிடம் தருகின்றனர். ஆரம்ப பாடசாலைகளில் பெரும்பாலும் ஆசிரியைகளாக பெரும்பாலும் பெண்களையே கல்வி அமைச்சு நியமிக்கின்றது. குழந்தைகள் அழுதால் கூட அதனைப் பொறுத்திடும் பண்பு பெண்களிடம் மட்டுமே காணமுடிகின்றது. பொதுவாக பாலர்கள் மேல் கோபம் எழாதவாறு பொறுமை காக்க செய்கின்றது.
பெண்ணின் பெறுமையில் இன்னொறு உயிர் பிறப்பதற்கு இறைவன் அவளுக்கு அளித்த கொடை “தாய்மை” எனும் அங்கிகாரம் ஆகும்.
” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்கிறார் பாரதியார்.
“ஒரு பெண் கல்வி அறிவு பெறுவது அக்குடும்பமே கல்வி அறிவு பெறுவதற்கு சமம்” என்கிறார் நேரு.
“சமூகத்தில் ஏற்படும் முக்கியமான மாற்றங்கள் பெண்களாலே” என்கிறார் மகாத்மா காந்தி.
பெண் வெளியில் சென்று படிப்பதற்கு பதிலாக வீட்டிற்குள்ளே இருக்கும் விடயங்களைப் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்…”அடூப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று முன்னோர்கள் கேட்டிருப்பார்கள் போல…” பெண் என்பவள் சமூகத்தில் நடமாடும் கடவுள், வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு, அலுவலக சுமை என அனைத்தையும் சவாலாக ஏற்று சாதனை புரிகிறாள். வேலை நாட்களில் பம்பரமாகசுழன்று தன் கடமைகளை நிறைவு செய்கிறாள். தன் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளை கடந்து வருகிறாள். “பேதை,பெதும்பை, மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம்பெண் ” என பல பரிமாணங்களை எடுத்து வருகிறாள். குழந்தையாக இருந்து நடை பழக ஆரம்பித்த காலத்திலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்க ஆரம்பித்து விடுகிறாள். சிறு வயது முதலே வீட்டை சுத்தம் செய்வது வாசலில் கோலமிடுவது என ஆரம்ப தொடக்கமாக தன் பணிப் பங்கினை உயர்த்துகிறாள்.
ஆனால் எமது சமூகமானது வீட்டில் அம்மா என் செய்கிறார் எனக் கேட்டால்,அம்மா வீட்டில் சும்மா இருக்கிறாள் என கூறுகிறார்கள்.ஆனால் தனக்காக ஒரு நிமிடபொழுதுக்கூட ஒதுக்கி கொள்ளாமல் இயந்திரம் போல இயங்கி கொண்டிருப்பாள்.என்பதே சாத்தியமான உண்மை. சமூக அங்கிகாரம் நம் நாட்டைக்கூட, தாய் நாடு என்றும், தாய் மண் என்றும் தான் கூறுகிறோம். நம் மொழியையும் தாய் மொழி என்று தான் அழைக்கின்றோம்.
பெண் என்பவள் தாய்க்குலத்தின் வற்றாத அன்பையும்,அயராத உழைப்பையும் குடும்பத்திற்காக வழங்குபவள் ஆவாள். அதனால் தான் வற்றாத ஆறுகளுக்கும், நதிகளுக்கும்”கங்கா,யமுனா,காவிரி,கோதாவரி”
என்று பெண்களின் பெயர்களை வைத்துள்ளர். யாசகம் கேட்டு வீட்டிற்கு வருவோரும் அழைப்பது ,அம்மா தாயே என்று தானே..உயிரை படைக்கும் கடவுளாக பிரம்மனே தன் வேலையை பெண்ணிற்கு அளித்திருக்கிறார்.
பெண்ணே நீ
பூமியின் சொர்க்கம்
உன் புன்னகையினால் அல்லவோ
பூமி சிரிக்கின்றது.
மண்ணிற்கு அடுத்தபடியாய்
விளைவிப்பதில்
நீயும் ஒரு கண் பொன் நிலம்…
அன்னையாய், துணைவியாய்
அக்காளும் தங்கயுமாய்
ஆயிரம் அவதாரங்கள்
நீ காட்டும் அன்பில்
இதுவரை நிகர் இல்லை
அன்பின் பிறப்பிடம் நீ அல்லவா
நீ பூத்து, காய்த்து கணிவதால்
இயற்கை கூட உன் பெயரை
புனைபெயராய் இயற்கையின் அன்னை..
உயிர்களை பிறப்பிப்பதனால்
நீ கடவுளின் மனித அவதாரம்
அன்பின் பிறப்பிடமாவதனால்
நீ சொர்க்கத்தின் சுரங்கம்
அரவணைக்கும் தருணங்களில்
ஆண்டவனுக்கு அடுத்த தாய்!
பெண்மையே மனிதனை ஆக்கும் தெய்வம்
பெண்மையே மனிதரில் வாழும் தெய்வம்
பெண்மையே மனிதனை ஆளும் தெய்வம்
பெண்மையே போற்றுவோம்
உண்மையை ஏற்போம்…
எனவே தான் சமூகத்தின் நிலையில் பெண் என்பவள் “தரை தொட்ட காலம் முதல் நடை கொண்ட காலம் வரை அங்கம் வகித்து வருகிறாள். தியாகத்தையே தொழிலாக கொண்டு அர்ப்பணிப்பை வாழ்வாக்கி உலகுக்கு
விடி வெள்ளியாய் திகழ்ந்து வருவது அவளது பெண்மையின் திறமையே ஆகும்.
ரவிச்சந்திரன் சாந்தினி
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்