149
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ராஜித சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #ராஜிதசேனாரத்ன #சரணடைந்துள்ளார்
Spread the love