170
நெல்லியடி காவல்துறையினரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி காவல்துறையினர் தமது காவல்துறைபிரிவுக் கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை விசேட வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் போது நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வரை கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து பலரும் முண்டியடித்து வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்திருந்தனர். சிலர் அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது. #மதுபான #கைது #நெல்லியடி
Spread the love