Home இலங்கை வழிப்பறி கொள்ளையர்கள் கைது.

வழிப்பறி கொள்ளையர்கள் கைது.

by admin

 

யாழில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை களவாடிய மோட்டார் சைக்கிள் வழிப்பறி திருட்டு சந்தேக நபர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட திருட்டு சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும்,  9 தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட  9 தங்கச் சங்கிலிகளில் 6 தங்கச்சங்கிலிகள் முறைப்பாடு வழங்கியவர்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 3 தங்கச்சங்கிலிகள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும்  காவல்நிலையங்களில் முறைப்பாடு கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
புத்தூர் சோமஸ்கந்த வித்தியாலய ஒழுங்கைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிள் ஒன்றின் இலக்கத்தகட்டினை மறைத்து கட்டியவாறு பயணித்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மறித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் காவல்துறையினர்  விசாரித்து அவர்களை சோதனையிட்ட போது, அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலியொன்றை மீட்டதுடன் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டனர்.

அதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், காவல்நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் போது அவ அவர்கள் இருவரும் இருபாலையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களே அண்மைக்காலமாக வீதிகளில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துவந்துள்ளதாக  காவல்துறையினர் கண்டறிந்தனர்.

கோப்பாய், கொடிகாமம், அச்சுவேலி , சாவகச்சேரி, சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இத்திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களிடம் அறுக்கப்பட்ட சங்கிலிகளை திருநெல்வேலியில் உள்ள நகைக்கடையொன்றில் அடகு வைத்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அடகுவைத்த நகைகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 9 தங்கச் சங்கிலிகள், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றையும் நீதிமன்றில் கையளிக்கவுள்ளனர். #வழிப்பறி  #கொள்ளையர்கள் #கைது #புத்தூர்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More