ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த மே 10ம் திகதி இடம்பெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்றும் உயிரிழப்பும் பதிவாகியிருந்த காரணத்தினால் அங்கு பொது முடக்கத்தை தளர்த்தும் முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது.
ஜெர்மனியில் இதுவரை 177,850 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில்8,216 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஜெர்மனி #பிரார்த்தனை # கொரோனா