161
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வெள்ளைவான் தொடர்பான ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை பரிசீலிப்பதற்காக, வேறொரு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான், இன்று(27) உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. #ராஜிதசேனாரத்ன #விளக்கமறியல் #வெள்ளைவான்
Spread the love