Home உலகம் ஜோர்ஜ் பிளாய்ட்டின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் :

ஜோர்ஜ் பிளாய்ட்டின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் :

by admin

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் என்னும் 46 வயதான கறுப்பு இனத்தவர் காவல்துறையினாரால் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகின்ற நிலையில் து உயிhழப்புக்கு நீதி கேட்டு அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு மின்னசோட்டா, நியூயோர்க், அட்லாண்டா என பல பகுதிகளிலும் கறுப்பு இன மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தமையினால் லொஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்பட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய லண்டனில் உள்ள டிரபால்கர் சதுக்கம் மற்றும் பட்டர்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளிப்புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  #ஜோர்ஜ்பிளாய்ட் #உயிரிழப்பு  #போராட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More