அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் என்னும் 46 வயதான கறுப்பு இனத்தவர் காவல்துறையினாரால் கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து கொல்லப்பட்டவருக்கு நீதி கோரி றுப்பின மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன.
லொஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெள்ளை மாளிகை முன்பும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளை மாளிகை முன்பு மீண்டும் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் அமைதியான முறையில் ; போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பின்னர் இரவு 11 மணி முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக மேயர் அறிவித்ததனையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற முயன்றதால் வன்முறை வெடித்து இரு தரப்பினருக்குமிடையே மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #வெள்ளைமாளிகை #மோதல் #தீவைப்பு #ஜோர்ஜ்பிளாய்ட்