Home இந்தியாதமிழகத்தில் கொரோனாவிற்கு பலியான முதலாவது எம்எல்ஏ

தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியான முதலாவது எம்எல்ஏ

by admin

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ம்திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஜெ அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #தமிழகம் #கொரோனா #எம்எல்ஏ   #அன்பழகன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More