Home இந்தியாஇந்தியாவில் 10,000 நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் 10,000 நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

by admin

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 10,000 நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 343091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9900 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 180013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153178 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46504 பேருக்கும், டெல்லியில் 42829 பேருக்கும், குஜராத்தில் 24055 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. #இந்தியா #கொரோனா #உயிரிழப்பு  #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More