Home உலகம்ஒஸ்கர் விருது வழங்கும் விழா பிற்போடப்பட்டுள்ளது.

ஒஸ்கர் விருது வழங்கும் விழா பிற்போடப்பட்டுள்ளது.

by admin


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த ஒஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளது. ஒஸ்கர் விழா 2021-ம் ஆண்டு பெப்ரவரி 28-ம் திகதி நடைபெறவிருந்த நிலையில்  அது தற்போது ஏப்ரல் 25-ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மூன்று முறை மட்டுமே ஒஸ்கர் விழா பிற்போடப்பட்டிருந்தது. 1938-ல் லொஸ் ஏஞ்சல்ஸ் வெள்ளத்தின் போதும், 1968-ல் மாட்டின் லூத்தர் கிங் கொல்லப்பட்டபோதும், 1981-ல் ஜனாதிபதி ரொலாண்ட் ரீகனை கொல்ல நடந்த முயற்சியின்போதும் மட்டுமே ஒஸ்கர் விழா ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு ஒஸ்கர் விழா நேரடியாக நடக்குமா அல்லது இணையத்தில்; நடக்குமா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை

அதேவேரள அதே போல, பிரிட்டிஷ் திரைப்பட விருது விழாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு (2020) வெளிவர இருந்த பல திரைப்படங்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #ஒஸ்கர் #விருது #பிற்போடப்பட்டுள்ளது #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More