Home இலங்கைதாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்

தாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்

by admin

வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை  எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான்  நீதிமன்றுஉத்தரவிட்டது.

கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில் பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைத்தொலைபேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய  காவல்  நிலைய பதில்  பொறுப்பதிகாரி சி.ஐ றபீக் வழிகாட்டலில் சுமார் ஒரு மாத காலமாக   சம்மாந்துறை காவல் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா  உள்ளிட்ட விசேட  காவல்துறை  குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மேற்குறித்த வீதிகளில் கைத்தொலைபேசிகளை பறித்து சென்ற இருவர் புதன்கிழமை(17)  கைதாகினர்.

குறித்த கொள்ளையர்கள் கைத்தொலைபேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி காணோளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட காவல்துறையினர் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை அவர்களது தாயின் உதவியுடன் கைது செய்தனர்.

குறித்த கைது நடவடிக்கைக்கு  காவல்துறையினருக்கு கைதான சந்தேக நபரின் தாய் ஒத்துழைப்பு வழங்கியதுடன் கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரிவிட்டார் #தொலைபேசி  #திருடர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More