அழகு என்பது வெளித்தோற்றத்தால் முகபாவம் உடையவர்களென குறிப்பிட்டால் அது பொருத்தமாகது காரணம் எந்தவொருநிலையிலும் மனிதாபிமானத்துடனும் உதவும், மனப்பான்மையுடனும் உளம் கொண்டவர்களே அகத்தால் அழகானவர்கள் என்பதே மனம் நிறைந்த உண்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி செல்லும் ஜீவன்கள் வாழும் உலகம் இது.
ஆர்ப்பரிக்கும் கடலலைப்போல உலகத்தில் ஓயாத வறுமை ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றது.. அதற்கான சூழ்நிலையை காலம் அமைத்துச் செல்கிறது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்கும் போதே வாழ்க்கையில் மாற்றம் காண ஆரம்பிக்கின்றது. “உலகில் மாற்றம் ஒன்றே மாறதது ” ஆனால் மாற்றத்தையும் மாறி மாறி ஏற்படுத்திச்செல்கின்றது. காலத்தின் வறுமை. அதுமட்டுமன்றி காலம்காட்டும் கண்ணாடியாய் ..
வாழக்கையின் யதார்த்தத்தை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் அவர்களின் வாழ்க்கையை பூரண பரிமாணத்திற்கு இட்டுச் செல்பவர்கள் உதவும் மனப்பான்மை உடையவர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
“நான் மனிதன் ,மனிதனுக்கு இயல்பான எதனையும் நான் வெறுப்பதில்லை” எனக்கூறுகிறார் ரெறன்ஸ் எனும் இலத்தீன் புலவர். இவரின் கருத்து வவேற்கத்தக்கது. இக்கூற்று நமது பண்பாட்டில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. மனிதனை என்றும் உள்ளத்தால் பேணவேண்டுமென்றும், ஒரு செயலால் வரும் பிற நலன்களைக் கருதாமல் நன்மையை,போற்றி பிறருக்கு உதவ வேண்டுமென கூறுகிறார். அவ்வாறே வசதி உள்ளம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு இல்லையென்ற சொற்பிரயோகத்தை நீக்கிவிட்டு விடுங்கள்.
” உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை”
என்று வாழ வேண்டும். அதாவது ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற கூற்று வறுமையினூடான உதவியை சிறப்பாக எடுத்துக்காட்டும். பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற மூன்று அம்சங்களும் மனித வாழ்க்கையில் நிலையற்றது. அதனாலே வாழும் போதே இயன்றளவு உதவியை உளம் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் செய்து விட வேண்டும். உதாரணமாக அண்மைக்காலமாக உலகவாழ் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் “கொரொனா” எனும் கொடிய நோய் யாவும் அறிந்ததே. இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் வறுமை நிலையில் வாடும் மக்களுக்கு உதவி கரம் நீட்டிய உள்ளம் கொண்டவர்களே நன்றி கூறுவதில் உலகவாழ் அனைத்து மக்களும் கடமைப்பட்டுள்ளோம்.
கற்றவர்களுக்கு முன்பு தாம் கற்ற கல்வியை எடுத்துக் கூறுதல் மிகவும் இனிது. அறிவிற் சிறந்தவரை அடைதல் மிகவும் இனிது. தான் பிறரிடம் எள் அளவும் யாசிக்காமல் எல்லா வகையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ்தல் மிகவும் இனிது. இவ்வாறான நற்பண்புகளே ஒவ்வொருவரினதும் வாழ்க்கையை செம்மையாக்கும். அது மட்டுமன்றி உலகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளினது வாழ்வை வண்ணமயமாக்குவது உதவும் உள்ளம் படைத்தவர்களால்,, தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு தவளை வசித்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை. ஆனால் வண்டானது காட்டில் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து அதன் தேனை உண்ணும். அது போல தான் செல்வத்தை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது. ஏழை மக்களின் வறுமை கண்டு உதவி புரிய வேண்டும். அப்பொழுதே செல்வந்தர்களின் அகம் அழகாக்கப்படுகிறது.
அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே நிலையானதாக அமைந்து விடுவதில்லை இன்றைய செல்வந்தர்கள் நாளை ஏழையாக மாறலாம். அதே நேரம் இன்றைக்கு ஏழையாக வாழ்பவர்கள் நாளை செல்வந்தவர்களாக மாறலாம். வாழ்க்கை என்பது நிலையற்றது. அதற்கமைய ஒவ்வொருவரும் வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
“கிடைத்ததும் ஒரு நாள் தொலைந்து போகலாம்
பிடித்ததும் ஒரு நாள் மறந்து போகலாம்
எதுவுமே நிலையில்லா உலகம் இது..” அதுமட்டுமன்றி அடுத்த நிமிடம் இருப்போமா?இல்லையா? என்று நிரந்தரம் இல்லாத உலகத்தில் முடிந்தளவு பிறருக்கு உதவி செய்து அவர்களின் கஷ்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்.
“இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா??
என்றுமே இது நிலைக்குமா??
இன்று நீ கவலையில் உள்ளாயா??
எப்போதுமே இது நீடிக்குமா??
எதுவும் நிரந்தரம் இல்லை ஆததால் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.. உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப்போகிறது. துணிந்து செல்வோம் வாழ்க்கையை வெற்றிக்கொள்வோம். அத்தோடு கவலைகள் என்பது உதிரும் இலைகள் சந்தோசம் என்பது துளிர்க்கும் இலைகள் உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிடுங்கள் . வாழ்க்கை எனும் மரம் அற்புதமாக வளரும். நாம் அனைவரும் கோவிலுக்குச் சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை யாருக்கும் தீங்கு நினைக்காமல் இயன்றளவு பிறருக்கு உதவி செய்தாலே நாம் கோவில் சென்றதற்கு சமம். பணம், பொருள் என இந்த இரண்டுமே வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப சூழ் நிலைகள் மற்றும் குணத்தையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது.
அழகு என்பது ஒருவரின் உடல் அமைப்பின் அடையாளம் என்று நினைத்தால் அது உங்கள் அறியாமை ….
அழகு என்பது ஒருவரின் குண அமைப்பின்
அடையாளம் என்பதே உண்மை..!!!
பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை அனுபவிக்க மட்டும்தான் ஆனால் நல்ல குணம் சம்பாதிப்பது வாழ்க்கையை வாழ்வதற்கு ஆகும். அத்தோடு பணம் படைத்தவனிடம் பகைவனும் நண்பனாகின்றான். குணம் படைத்தவனிடம் நண்பனும் எதிரியாகிறான். வசதி வாய்ப்புகள் எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர வாழ்க்கை பூரணத்துவமான நிலைமைக்கு இட்டுச் செல்லாது என்பதே நிதர்சனமான நியதியாகும். வாழும் காலம் சிறிதாயினும் வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்..
ரவிச்சந்திரன் சாந்தினி
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்