Home இலங்கைஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன

ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன

by admin

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா , மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் இவ்வாறு விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மகிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.   #உலகக்கிண்ண #கிரிக்கெட் #இறுதிப்போட்டி  #ஆட்டநிர்ணயசதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More