214
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் காவல்துறையினர்விவரத்தை வெளியிட மறுத்துள்ளனர்.
அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் தினம் இன்றைய தினமாகியதால் ஏதேனும் நினைவேந்தல் நிகழ்வினை சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்யலாம் எனும் சந்தேகத்திலையே அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #சிவாஜிலிங்கம்#கைது #கரும்புலிகள்தினம்
Spread the love