255
யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள முன்பள்ளியில் கட்டடத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களும், மது அருந்துபவர்கள் மலை நேரஙகளில் அங்கு கூடி அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அந்த கட்டடத் தொகுதியில் தினமும் ஒன்று கூடும் இளைஞர்கள் அந்த கட்டடத்தில் இருந்து போதைப் பொருட்களை பயன்படுத்துவதுடன், மதுபானங்களையும் அருந்தி வருகின்றனர்.
இது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இது குறித்த எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேவேளை குறித்த முன்பள்ளி கட்டட தொகுதிக்கு சில காவல்துறையினர் சிவில் உடையில் வந்து செல்கின்றனர் எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். #மானிப்பாய் #போதைப்பொருள் #மது #அட்டகாசம் #கொரோனா #முன்பள்ளி
Spread the love