மூன்றில் இரண்டு பலம் வழங்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தை கோருகின்ற அரசாங்கம் 13ம் 19ம் திருத்தச்சட்டங்களை மாற்றப் போவதாக நேரடியாக தெரிவிக்கின்றது. அவ்வாறு மாற்றினால், தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி செயற்படும் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் இருக்க மாட்டார் என அவர் எச்சிரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சர்வாதிகாரமுள்ள சில வரையறைகள் விதிக்கப்படும் எனவும் மீண்டும் வடக்கு, தெற்கு பிரச்சினை உருவாகும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார். 13ஆவது திருத்தம் என்பது இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் வந்த விடயம் என்பதனால் அயல்நாட்டுடன் முரண்பட வேண்டியேற்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவிற்கு வாக்குறுதி வழங்கியே யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு எழுத்து மூலம் வாக்குறுதியை வழங்கிவிட்டு அதனை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு கோhருகின்றனர் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார். #13வதுதிருத்தம் #இந்தியா #பகைத்து #தயான்ஜயதிலக்க #உடன்படிக்கை