தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தலைமைச் செயலகத்தை இடித்து விட்டு 400 கோடி ரூபா செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தெலங்கானா முதல்லமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்திருந்தமைக்;கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.எனினும் நிஜாம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமும் இதில் உள்ளதால், இது மிகவும் பழமை வாய்ந்தது எனக் கூறி இதை இடிக்க தடை விதிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
அதேவேளை தலைமைச் செயலகத்தில் உள்ள 9 தனித்தனி கட்டிடங்களில் ஒன்று நிஜாம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதனை காரணம் காட்டி, இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு அனுமதியும் பெற்றிருந்தது.
இதை அடுத்து 6 லட்சம் சதுர அடியில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது #தலைமைச்செயலகம் #இடிப்பதற்கு #தடை