253
மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாகிய தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 6.15 மணிக்கு பள்ளிமுனை பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாசன் சீமான் அடிகளார் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் குழந்தை இயேசுவின் திருச்சுரூப ஆசீர்வாதமும் இடம் பெற்றது.
குறித்த திருவிழா திருப்பலியில் பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், உதவிப் பங்குத்தந்தையர்களான அருட்பணி. ஜெஸ்மன்ராஜ், அருட்பணி. சதாஸ்கர் , மன்னார் மடு மாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி. கிறிஸ்து நேசரெட்ணம், உதவி அதிபர் அருட்பணி. தயாளன் கூஞ்ஞ, வின்சென்சியன் சபைக் குருக்களும், டிலாசால் அருட் சகோதரரும், திருக்குடும்ப, பிரான்சிஸ்கன் மற்றும் யோசெவ்வாஸ் அருட் சகோதரிகளும் கலந்து சிறப்பித்தனர். #மன்னார் #குழந்தைஇயேசு #திருவிழா
Spread the love