381
கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கடை ஒன்றினுள் இருந்த ஒரு குழுவினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சந்தேக நபர்களை அடையாளம் காணவும் தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கத்தைக் கண்டறியவும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Spread the love

