Home இலங்கைகதிர்காமம் கோவிலில் நிதி மோசடி இடம்பெற்றதா? விசாரணை

கதிர்காமம் கோவிலில் நிதி மோசடி இடம்பெற்றதா? விசாரணை

by editorenglish

கதிர்காமம் தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கதிர்காமம் கோவிலில் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறி சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கதிர்காமத்திற்கு  சென்று இது தொடர்புடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கதிர்காம தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே, பொது நிதியை செலவழித்து கதிர்காமத்திற்கு செல்ல  வேண்டிய அவசியமில்லை என்றும், அடுத்த வாரம் கொழும்பில் இருப்பதால், குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்து உரிய வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் 10ஆம் திகதி காலை 11 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக  உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More