பிரித்தானியா சீனாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வந்தநிலையில ஹூவாய் நிறுவனம் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடி சீனாவுக்கு வழங்கி வருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்து அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
இந்த நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் பிரித்தானியாவும் தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 2027-ம் ஆண்டுக்குள் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் பிரித்தானியாவில்; இருந்து முழுமையாக அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆந்தவகையில் எதழிர்வரும் டிசம்பர் இறுதிக்கு பின்னர் ஹூவாய் நிறுவனத்திடமிருந்து புதிதாக 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக இ தெரிவிக்கப்பட்டுள்ளது. . பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #பிரித்தானியா #ஹூவாய் #தடை #5ஜி