Home இலங்கைநல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா

by admin

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா  இன்று (03.08.2020) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.

மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண  பக்தர்கள் கூடியிருந்தனர்.  பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.  #நல்லூர்க்கந்தசுவாமிஆலய #மஞ்சத்திருவிழா #முருகப்பெருமான் #பக்தர்கள்

 

படங்கள் – ஐ .சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More