பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 10,000 இற்கும் அதிகமான அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அமைதிக் காலப்பகுதியில் 80 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலான 2 முறைப்பாடுகள் அடங்குவதாகவும் பவ்ரல் அமைப்பு தொிவித்துள்ளது.
அமைதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டோர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இந்த முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பு தொிவித்துள்ளது #தேர்தல் #கண்காணிப்புபணி #பவ்ரல் #வன்முறை