185
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பிாித்தானியாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பிாித்தானியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பாடசாலைகளை மூடுவது நல்லதல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான வி்யங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பாடசாலைக்கல்வி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.
இனி முடக்கநிலை கடைப்பிடிக்கப்பட்டாலும் பாடசாலைகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். #பிாித்தானியா #செப்டம்பர் #பாடசாலைகள் #பொரிஸ்ஜோன்சன் #கொரோனா
Spread the love