நியூசிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமாக ஏற்பட்டுள்ளதனையடுத்து ஒக்லாந்தில் 12 நாட்களுக்கு முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் 102 நாட்களுக்குப் பின்னா் அந்நாட்டின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான ஒக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முடக்கநிலை பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பொதுவெளியில் வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் ஒக்லாந்தில் மேலும் 12 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜசிந்தா ஆா்டம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் கொரோனாவினால் 1,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் கொரோனாவால் நியூசிலாந்து தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பதை அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூறுவதாக பிரதமர் ஜசிந்தா ஆா்டம் தெரிவித்துள்ளார். #நியூசிலாந்து #கொரோனா #முடக்கநிலை #சமூகஇடைவெளி