160
இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸ், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (31.08.20) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவவில் அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு சொந்தமான கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
Spread the love