மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளாா்.
பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்த நிலையில் இன்று அவா் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளாா்.
இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு இடமளித்தமைக்கு எதிப்புத் தொிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #பிரேமலால் #பதவிப்பிரமாணம் #மரணதண்டனை #கறுப்புபட்டி