Home பிரதான செய்திகள் அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் ஒசாகா – அஸ்ரென்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் ஒசாகா – அஸ்ரென்கா

by admin

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா – அஸ்ரென்கா ஆகியோா் போட்டியிடவுள்ளனா்.

அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத அஸ்ரென்காவுடம் போட்டியிட்ட நிலையில் முதல் செட்டை 6-1 என செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றினார். இதனால் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அஸ்ரென்கா 2-வது செட்டை 6-3 எனவும் 3வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி செரீனா வில்லியம்சை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளாா்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா – அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 7(7)-6(1), 3-6, 6-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளாா்.

இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா – அஸ்ரென்கா ஆகியோாா் போட்டியிடவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கஓபன்டென்னிஸ் #செரீனா #நவோமிஒசாகா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More