பாடசாலைகளில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 81 பாடசாலைகளை மூடுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் முதல் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது எனவும் கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக பிரான்சில் 2,100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரென்னஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் 83 மருத்துவ மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பிரான்ஸ் கல்வி அமைச்சு தொிவித்துள்ளது
பிரான்சில் கடந்த சனிக்கிழமை மட்டும் 10,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்சின் மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கொரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் முடக்க காலத்தில் 4,000 என்ற அளவில் கொரோனா தொற்று காணப்பட்டிருந்த நிலையில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளாா்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசினால் இதுவரை உலக அளவில் 2.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #பாடசாலைகள் #கொரோனா #பிரான்ஸ் #முடக்ககாலம்