Home இலங்கைபிள்ளையான் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளாா்.

பிள்ளையான் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளாா்.

by admin

நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டிருந்தாா்

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியால் தேவாலயத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடா்பில் கைது செய்யப்பட்ட அவா் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. #பிள்ளையான் #கொழும்பு #நாடாளுமன்ற #ஜோசப்பரராஜசிங்கம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More